அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

Photo of author

By Rupa

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

Rupa

AIADMK general committee meeting invalid! Action decision given by the court!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

அதிமுகவின் ஒற்றை தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்தது முதல் கட்சிக்குள்ளையே பிரிவினை தான். அதிமுக கட்சிக்கு இடையே ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு தரப்புகளாக பிரிந்தது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒற்றை தலைமை ஏற்பதில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கி உத்தரவிட்டார்.

இதனையடுத்து தனது அனுமதி இன்றி பொதுக்குழு கூட்டத்தை கூட்டியதாகவும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதும் ஒப்புக்கொள்ள முடியாது எனக்கூறி நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வரவுள்ளது.அதன்பேரில் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையை நீடிக்கும் எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார். அந்த வகையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என கூறியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் இணை  ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறி இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.