மொத்தமாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதிமுக தலைமை!

Photo of author

By Sakthi

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த நாள் முதலே டிடிவி தினகரன் தரப்பு அதிமுகவையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு பழி வாங்கலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஜெயலலிதா உயிர் எழுந்தவுடனே அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார் அதோடு அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின்னர் தமிழக அரசியல் களத்தில் மாற்றங்கள் பல நிகழ்ந்தன.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இருவரும் பிரிந்து இருந்த நிலையில், அந்த இரு அணிகளும் ஒன்று சேர்ந்தன. இதனை தொடர்ந்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியை பொறுத்தவரையில் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு நிரந்தரமாக நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டன. அதன்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டார்கள்.

இதனை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிறையில் இருந்தபடியே நடத்தினார் சசிகலா.இந்த நிலையில்,அவர் சமீபத்தில் தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்தார்.அதன் பிறகு சிறிதுகாலம் பெங்களூருவில் ஓய்வெடுத்துவிட்டு அதன்பின்னர் தமிழகத்திற்கு திரும்பிய அவர் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.
பிறகு திடீரென்று ஒரு நாள் தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக ஒரு அறிக்கையை விட்டு அதோடு அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டார் சசிகலா.

இதனை சிறிதும் எதிர்பாராத டிடிவி தினகரன் சசிகலா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், சசிகலா போட்ட பொதுச்செயலாளர் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் இந்த வழக்கை கைவிடுவதாக நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு கொடுத்தார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் இரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து சசிகலா தொடுத்த வழக்கில் அவருடைய நிலை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அந்த சமயத்தில் சசிகலாவிடம் ஆலோசனை செய்து விட்டு அதன் பிறகு அதற்கான பதிலை தெரிவிப்பதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்திருக்கின்றார்.