“2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதிமுகவின் இலக்கு”:! ஓ.பி.எஸ் அதிமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை?

0
268

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்க்கு அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். அடுத்த முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் கூடி தேர்வு செய்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜ் கூறுகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்’ என்பது போல் பதிவிட்டார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல என்று இந்தக் கருத்துகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். மேலும் நேற்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து தலைமைக் கழகம் முறையாக அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுகவில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருப்பதை அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியோடு பார்த்துவருகிறார்கள். இருப்பினும் இந்த விவகாரத்தில் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மௌனம் காப்பது ஏன்? என்ற விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில் இந்தச் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நினைவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!’ என பதிவிட்டுள்ளார்.

பிறகு இந்தப் பதிவை ரீட்வீட் செய்த ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘நாளை நமதே’ படத்தில் இடம் பெற்ற பாடலில் வரும், ‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே..’ என்ற பாடலையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஒற்றுமையாக இருந்து எல்லோரும் தேர்தலை சந்திப்போம் என்று கூறுகிறார்.

Previous articleதமிழகத்தில் இன்று (14.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?
Next articleஆறு மணி நேரத்தில் டெல்லி டு காஷ்மீர் செல்லும் விரைவு சாலை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here