அதிமுகவின் அதிரடி அறிவிப்பால் நிம்மதி இழந்த அதிமுக தலைமை!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தமிழக மக்களிடம் வாக்கு கேட்பதிலும் அவர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில், அதிமுக திமுக என்ற இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த வாக்குறுதிகள் அனைத்தும் கவர்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

அதிமுக சார்பாக விடுக்கப்பட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கையில், தமிழக மக்கள் அனைவருக்கும் வாஷிங் மெஷின் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதேபோல இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஊனமுற்றவர்களுக்கு ஓய்வூதியமாக 2,500 ரூபாயும் 60 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வூதியமாக 2000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதேபோல வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு கட்டாயமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மற்றும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடும் விதமாக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2500 ரூபாய் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல 18 வயதிருக்கும் மேற்பட்டோர் இலவசமாக ஓட்டுனர் பயிற்சி பெற்று அவர்களுக்கு இலவசமாக ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக ஆளும் கட்சியான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இது எதிர்கட்சியான திமுக இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதேபோல மாணவர்கள் வாங்கியிருக்கும் கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இப்படி அடுக்கடுக்கான வாக்குறுதிகளை ஆளுங்கட்சி தரப்பு அள்ளி வீசி வருவதால் எதிர்கட்சியான திமுக மிகக் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்பது போன்று எதிர்க்கட்சியான திமுக தெரிவித்து வந்தது.


ஆனால் அதன்பிறகு அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எதிர்க்கட்சியை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற அரசியல் கட்சிகளும் மற்றும் அரசியல் நோக்கர்களாலும் உற்று நோக்கப்பட்டது. அந்த அளவிற்கு அவருடைய செயல்பாடு நேர்த்தியாகவும் வேகமாகவும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.