வசமாக சிக்கிய திமுக எம்பி!

Photo of author

By Sakthi

தேர்தல் தேதி அறிவித்து பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் திமுகவின் எம்பி ராசா முதல்வரின் தாயார் குறித்து தவறான முறையில் பேசியது தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது.அதேபோல ஆயிரம்விளக்கு சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் பட்டியலின ஆண்கள் உயர்சாதிப் பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் சாதி ஒழிந்துவிடும் என்று தெரிவித்தது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல திமுகவின் தேர்தல் அறிக்கையில் கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சுமார் 60 ஆயிரம் நிதி உதவி தாலிக்கு தங்கம் போன்றவற்றை வழங்குவோம் என்று தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் பல தரப்பினரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.இப்படி அடுத்தடுத்து பலவகையான சிக்கலான கருத்துக்களை திமுகவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வந்தது திமுகவை பலவீனப்படுத்தி கொண்டே வந்தது.

திமுகவை சார்ந்தவர்கள் மட்டுமல்ல அந்த கட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளும் கூட ஒரு சில சர்ச்சைக்குள்ளான வாக்குறுதிகளை இந்த தேர்தலில் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாங்கள் வெற்றி பெற்றால் கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தனிப்படை அமைத்து பாதுகாப்பு கொடுப்போம் மற்றும் இந்து மதக் கோயில்களை இடித்து அந்த நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிப்போம் என்பது போன்ற வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். இதுவும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது.

அந்த வகையில், கடந்த மாதம் 29ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகில் திமுகவின் வேட்பாளர் குறிஞ்சி பிரபாகரனை ஆதரிக்கும் விதமாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அவர் உரையாற்றிய போது தெரிவித்ததாவது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஆளுங்கட்சி சார்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவருடைய மகனுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறார் தயாநிதிமாறன்.

ஆகவே இது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த மனுவில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னுடைய மகன் தொடர்பாக எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தயாநிதிமாறன் குற்றம்சாட்டி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிணத்துக்கடவு காவல் நிலைய காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார் .அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தயாநிதிமாறன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.