தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தஞ்சை மாவட்டம் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை குறித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத குறித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் தஞ்சை ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துறை திருஞானம், பால்வளத்துறை தலைவர் காந்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், அரசு கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் சேகர், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவ கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் போன்றவர்களின் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான காமராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது அவர் அதிமுக சாதாரண இயக்கம் அல்ல எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம், ஜெயலலிதா அம்மா கட்டிக் காத்த இயக்கம் மற்றும் எடப்பாடியார் வழி நடத்துகின்ற இயக்கம் என்றும் இந்த இயக்கத்தின் பலம் தொண்டர்கள் உள்ளனர் எனவும் பேசினார்.
மேலும் அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது. தற்ப்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த வாக்குறுதியில் இதுவரை சில வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தி மு க அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேலும் சொத்து வரி குடிநீர் இணைப்புக்கு வரியை உயர்த்தி உள்ளனர் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என குற்றம் சாட்டினார்கள்.
மேலும் அதிமுக எப்பொழுதும் வலிமையோடு இருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கிறது என்பதை இந்த கூட்டமே காட்டுகிறது என்றும் பேசினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் சந்திர கோபால், அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் நாகராஜன், ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, எம்ஜிஆர் ஒன்று செயலாளர் மாலை ஐயப்பன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால் ,காந்திமதி, கேசவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டமானது முழுக்க முழுக்க மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ,விலைவாசி உயர்வை கண்டித்து நடத்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.