நீண்ட நாள் கோரிக்கை க்குப் பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, ஆனால் அந்த சமயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இந்த ஒன்பது மாவட்டங்களில் தவிர்த்து தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னர் நீதிமன்றம் இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியது.
இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக, அதிமுக போன்ற தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் மிகத்தீவிரமாக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த விதத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் பொறுப்பில் மருத்துவர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் அவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு உடன்பிறப்புகள் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.