“அதிமுக நாதக” இந்த ஓட்டுகளெல்லாம் விஜய் க்கு தான்.. அடித்து கூறும் காங்கிரஸ் நிர்வாகி!!
விஜய்க்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 10% வாக்குகள் கிடைக்கும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ராகுல் காந்தி மற்றும் விஜய்-கிடையே நீண்ட கால நட்பு ஒன்று உள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இவர்களது கூட்டணி அமையுமா என்று பலரது யோசனையாக உள்ளது. குறிப்பாக பாஜகவை எதிர்க்கும் விதமாக விஜய் நீட் ரத்தை கையில் எடுத்துள்ளார்.
அதே சமயம் இவர் எந்த ஒரு மேடையிலும் திமுகவிற்கு முட்டுக் கொடுக்கவில்லை. மக்களவை கட்சியாக மாறிய நாதக உள்ளிட்டவைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தும், 40க்கு 40 பெற்ற திமுகவிற்கு தனது சார்பாக எந்த ஒரு வாழ்த்துக்களையும் விஜய் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து நாம் இவரின் அரசியல் வியூகத்தை சிறிதளவு கணிக்க முடிகிறது.
அந்த வகையில் இவரின் வாக்கு சதவீதம் ஆரம்ப கட்டத்திலேயே எப்படி இருக்கும் என்பது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அதில் அவர், விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு வந்த பொழுது எப்படி எட்டு சதவீதம் வாக்குகள் இருந்ததோ அதேபோல இளைஞர்களின் செல்வாக்கை பெற்றுள்ள விஜய்க்கு அதிகபட்சமாக 10 சதவீதமாவது இருக்கும்.
இந்த பத்து சதவீதமானது அதிமுக பலவீனமடைந்து வருவதாலும் அதே சமயம் சீமானுக்கு விழும் ஓட்டுகள் என அனைத்தும் இவருக்கு சாதகமாக அமையும். இதையெல்லாம் வைத்து இவருக்கு பத்து சதவீதம் கிடைக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. அதேபோல எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து கூறியதால் இவர்களது கூட்டணி உண்டாகும் என்றெல்லாம் எதிர்பார்க்க இயலாது.
ராகுல் காந்தியின் முக்கிய நோக்கமே பாஜகவை வீழ்த்துவது தான், அதனால் அவர்களின் கூட்டணி தவிர்த்து யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்வார். அதேபோல தமிழகத்தில் பிரிக்க முடியாத கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் திமுக உள்ள நிலையில் அதனை எப்பொழுதும் உடைக்க முடியாது. எப்படி இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோல சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.