சார்பட்டா பரம்பரை விவகாரம்! இயக்குனர் பா ரஞ்சித்திற்க்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக!

Photo of author

By Sakthi

சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவின் புகழ்பாடும் திரைப்படமாக இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக எமர்ஜென்சியின் காரணமாக தான் திமுக ஆட்சிகவிழ்க்கப்பட்டதாக வரும் கதைக்கு பலரும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக கொண்டு சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது என்ற காரணத்தால், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் எப்போதும்போல உண்மை கதை என்று சொல்லி பா ரஞ்சித்திற்குத் தெரிந்த கதையை மட்டும் வைத்துக்கொண்டு திரைப்படம் எடுத்துள்ளதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் தொடக்கத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி முதல் இறுதிக்காட்சியில் திமுக நீல சட்டையாக மாறி இது எங்க காலம் என ஒரு சிலரை வம்பு இழுத்து கதையை முடித்து வைத்திருக்கின்றார் பா ரஞ்சித். இதற்கிடையில் பொய்யாக சித்தரித்த கதையை வைத்து படமெடுத்த சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் உண்மைக்கு அப்பாற்பட்ட பல காட்சிகள் மற்றும் வசனங்கள் உள்ளிட்டவை இருப்பதாக பார் ரஞ்சித் உட்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாபு முருகவேல் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஒரு பேட்டியை கொடுத்திருக்கின்றார்.

அந்தப் பேட்டியில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் உண்மைக்கு அப்பாற்பட்ட பொய்யான பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கின்றார் அதிலும் குறிப்பாக மிசா சட்டம் அமலில் இருந்த காலகட்டத்தில் முதலமைச்சரின் மகன் அதாவது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக ஒரு பொய்யான செய்தியை அந்த திரைப்படம் தெரிவித்திருக்கிறது.

ஆனாலும் கருணாநிதியின் மகனான ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்தது தொடர்பான எந்த விதமான ஆதாரமும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை .அப்படி இருக்கும்போது அந்த ஆதாரத்தை திரைப்படக் குழு வெளியிட வேண்டும் இல்லையெனில் நாங்கள் எடுத்த திரைப்படம் கற்பனை படத்தில் இருக்கின்ற சம்பவங்களுக்கும், படத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை படக்குழு ஒப்புக்கொண்டு அது தொடர்பான செய்தியை நாளேடுகளில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு வரலாற்று திரைப்படம் என தெரிவித்து விட்டு உண்மைக்கு அப்பாற்பட்ட பல காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார்கள் அதனை நீக்க வேண்டும். உண்மை என்ன என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிமுக தயங்காது என பாபு முருகவேல் எச்சரிக்கை செய்திருக்கிறார்.