முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்! முன்னாள் அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த அதிமுகவினர்!

Photo of author

By Sakthi

அதிமுகவில் கடலூர் நகர செயலாளர் பதவியை வகித்து வந்தவர் குமரன் இவர் கடலூரில் மாநகராட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிவிப்பில் சென்னை துறைமுகம் தொகுதி சார்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ரவி, கடலூர் மத்திய மாவட்டத்தைச் சார்ந்த கடலூர் நகர செயலாளர் குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் வீரமணி, உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கடலூர் நகர செயலாளராக இருந்த குமரன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவைச் சேர்ந்த அவருடைய ஆதரவாளர்கள் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் இருக்கின்ற எம்ஜிஆர் சிலை முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணமாக, முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எம் சி சம்பத் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இதன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.