பாமக மீது வீண்பழி சுமத்தும் அதிமுக முக்கிய நிர்வாகி! நடவடிக்கை எடுக்குமா அதிமுக தலைமை!

0
140

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது அப்படி அது தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பினைப் பெற்றது.அப்படி எதிர்க்கட்சியாக அதிமுக அமர்வதற்கு முக்கிய காரணமாக, கருதப்படுவது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 6 சதவீத ஓட்டுகளை தன்வசம் வைத்திருக்கிறது என்பது பலரும் அறிந்ததே.

ஆகவேதான் அந்த கட்சியின் பலத்தை தெரிந்து கொண்டதால் எந்தக் கட்சியுமே அந்த கட்சியை விரோதித்து கொள்ள விரும்பவில்லை.அப்படி இருக்கையில் தேர்தலுக்கு முன்புவரை அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமை மிகத் தீவிரமாக முயற்சி செய்தது. அதன் காரணமாகவே பாட்டாளி மக்கள் கட்சி கேட்ட ஒரு சில முக்கிய விஷயங்களை செய்து தர சம்மதித்து.அதன்படி சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சுமார் ஐந்து தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் மூலம் வன்னியர்களின் வாக்குகளை அதிமுகவும் பெற்றது.

அப்படி இருக்கும்போது தற்போது அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தொடர்பாக உரையாற்றிய அவர் சட்டசபைத் தேர்தலில் போளூர், கிருஷ்ணகிரி, போன்ற 6 தொகுதிகளில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு தான் அவர்களுக்கு செல்வாக்கும் அதிகாரமும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார். அவ்வாறு இருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என்றால் அதிமுக 20 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது என்று அவர் தெரிவித்திருப்பது முறையல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்து இருக்குமா என்பது சந்தேகம்தான்.பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் அறிந்தும் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது அதிமுகவினர் இடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணி சார்ந்த முக்கிய காட்சிகள் தோல்வியில் இருந்து தப்பித்து விடும். அப்படி ஒவ்வொரு முறையும் பாட்டாளி மக்கள் கட்சியை வைத்து வெற்றி பெற்று விட்டு கடைசியில் அந்த காட்சியை குறை சொல்வதே தமிழக அரசியல் கட்சிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதற்கு அதிமுகவும் விதிவிலக்கு அல்ல என்று தற்போது தெரியவந்திருக்கிறது.

Previous articleலாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ!
Next articleஇன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக்! படுகுஷியில் குடிமகன்கள்