வேலை முடிந்தது! சொந்த ஊருக்கு செல்ல மூட்டை கட்டிய டிடிவி தினகரன்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருப்பதால் எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்யும் வேலையில் இறங்கியிருக்கின்றன.

அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. அதேபோல அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா மற்றும் விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக தலைமை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்தநிலையில், அதிமுகவை கடுமையாக எதிர்த்து வரும் டிடிவி தினகரனுக்கு எதிராக ஒரு முக்கிய நபரை களம் இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளருமான புகழேந்தி அவர்களை தான் அதிமுக டிடிவி தினகரனுக்கு எதிராக களம் இறக்கப் போவதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோல அவர் ஓசூர் தொகுதியிலும் சென்னை அண்ணாநகரில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

ஆனால் பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவிக்கும் போது டிடிவி தினகரன் எங்கே நின்றாலும் சரி கட்சியின் அனுமதியுடன் அவரை எதிர்த்து நான் களம் காண தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அவருடைய இந்த பேச்சு வெறும் வாய்ப் பேச்சாக தெரியவில்லை என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால் அதிமுகவை கடுமையாக எதிர்த்து வரும் டிடிவி தினகரன் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக தலைமை காத்துக் கொண்டு இருக்கின்றது.ஆகவே அவருக்கு சரியான போட்டியாளரை தேர்வு செய்வதில் அதிமுக தலைமை முனைப்பு காட்டி வருவதாக சொல்கிறார்கள்.

அதேபோல டிடிவி தினகரன் தற்சமயம் சட்டசபை உறுப்பினராக இருந்து வரும் ஆர். கே. நகர் தொகுதியில் அவர் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று இருக்கின்றார் என்று புகழேந்தி குற்றம்சாட்டி இருக்கின்றார்.

அதேபோல வெற்றி பெற்றதுடன் சரி அதன்பிறகு ஆர்கே நகர் தொகுதிக்கு டிடிவி தினகரன் சென்றதே இல்லை என்றும் சொல்லி இருக்கின்றார். அதேபோல ஆர்கே நகர் தொகுதி மக்களும் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஆகவேதான் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அவர் ஆர்கேநகர் தொகுதியை ரிஜக்ட் செய்து விட்டு தஞ்சை மாவட்டம் மன்னார்குடி பகுதியில் ஒரு தொகுதியை தேர்வு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அவர் மன்னார்குடி பக்கம் சென்ற சமயத்தில் இதனை அவர் உறுதி செய்ததாக சொல்லப் படுகின்றது. ஆகவே இந்த முறை நிச்சயமாக ஆர் .கே. நகர் தொகுதியில் அவர் நிற்கப் போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அப்படிப் பார்த்தோமானால் தஞ்சை மாவட்டத்தில் அதிமுகவின் பலம் வாய்ந்த வேட்பாளரை அந்த கட்சி அறிவிக்கும் என்று தெரிகின்றது.