அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு

Photo of author

By Savitha

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் மனு அளித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததை அங்கீகரிக்க கூடாது எனவும் கோரிக்கைபல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அதை மனதில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியின் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்ததற்கு பிறகு டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.5 புகார்கள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.

எடப்பாடி சர்வாதிகாரியாக மாறிவிட்டார் கர்நாடக தேர்தலுக்கு இரட்டை இலையை எங்களுக்கு கொடுக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமியே ஒரு ஊழல் வாதி. திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை எடப்பாடியின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும்.ஒபீஸ் கையொப்பம் இல்லாமல் எடப்பாடி தரப்பால் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டி இட முடியாது பேட்டியளித்துள்ளார்.