மதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

Photo of author

By Sakthi

மதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

Sakthi

பாஜகவின் வேல் யாத்திரை சமந்தமாக பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு நமது அம்மா நாளிதழ் மூலம் அதிமுக பதிலடி கொடுத்து இருக்கின்றது.

தமிழ்நாட்டில் வேல் யாத்திரையை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டிருந்த நிலையில். தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை.

ஆனாலும் அந்த கட்சியின் தலைவர் எல் முருகன் அவர்கள் தடையை மீறி யாத்திரையைத் தொடங்கினார்.

இதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் உள்பட அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.

இருந்தபோதிலும், நாளைய தினம் யாத்திரை மீண்டும் தொடங்குவோம் என்று தெரிவித்திருந்தார் அதேபோல அந்த கட்சியை சேர்ந்த மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் யாத்திரையை தடுக்க நினைப்பது, எதிர் விளைவுகளை உண்டாக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.