88 லட்சத்தை கடந்த பாதிப்பு: 1.30 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!

0
186

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 30,548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,45,127 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 435 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,30,070 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,851 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 82,49,579 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 93.26 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 4,65,478 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 8,61,706 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 12,56,98,525 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleவாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Next articleமதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here