மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது! திமுகவை சாடிய முதல்வர்!

Photo of author

By Sakthi

அதிமுகவினர் டோக்கன் கொடுப்பதாக திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருக்கிறார் .சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக-வும் தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில் மக்கள் நீதி மையம் கட்சியும் ஆரம்பித்துவிட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆட்டையாம்பட்டி பகுதியிலே உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி சரோஜா போன்றோர் உடன் இருந்தார்கள்.

பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் கொரோனா பாதிப்பை கருத்தில் வைத்து எல்லோரும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூபாய் 2500 கொடுக்கப்படும் என்று அறிவித்து இருக்கின்றோம். ஆனால் அதிமுகவினர் ஒவ்வொரு வீடாக சென்று பரிசு பக்கங்களை கொடுக்கிறார்கள். என்று பொய் சொல்லி வருகின்றார் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

மக்களிடம் இந்த திட்டமானது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. எனவும் அதிமுகவிற்கு நற்பெயர் வந்து விடுமோ என்ற பயத்தால் இந்த திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என்று சூழ்ச்சி புரிந்து பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. சென்ற வருடமும் கூட இதே போல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். மக்களுக்கு நல்லது செய்வது எதுவுமே எதிர்க்கட்சிக்கு பிடிக்காது என்று விமர்சனம் செய்தார் தொடர்ச்சியாக திறந்தவெளி காரில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர்.