ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணியானது பல நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. தமிழகத்தில் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பது பாஜக தான், அவர்களுடன் கூட்டணி அமைத்தால் எப்படி வெற்றி பெற முடியும் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்குவதில்லை என்று குற்றச்சாட்டு அவர்கள் மீது இருக்கும் பட்சத்தில் எப்படி மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்ய முடியும்?? இப்படி இருக்கையில் இது அனைத்தும் ஒத்து போகாமல் தான் பலரும் திமுக கட்சிக்குள் நுழைந்து வருகின்றனர்.
அதேபோல அதிமுக பாஜக இரண்டாவது முறையாக கூட்டணி வைக்கும் போது பல்வேறு கோட்பாடுகளை வரையறுத்துள்ளது. ஆனால் அதனையெல்லாம் மறந்து பாஜக ஆளுமை செய்ய வேண்டும் என நினைக்கிறது. இது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. பாஜக கூட்டணிக்கு முன்பாகவே விஜய்யுடன் இணையதான் முக்கிய பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் தொகுதி பங்கீடு ஆளும் தலைமை என எதுவும் எடப்பாடிக்கு ஒத்து வராததால் அதை அப்படியே கைவிட்டார்.
ஆனால் தற்போது பாஜகவிற்கு விஜய்யே மேல் என நினைக்கிறாராம். இதனால் அவர்களது கூட்டணியை கை கழுவி விட்டு விஜய்யுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேட்டியளித்தது அதிமுக பாஜக இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டாயம் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தான் அரசியல் வட்டாரங்களும் பேசுகின்றனர். கடந்த சில மாதங்களாக பாஜகவின் அதிகார ஓங்கல் என்பது சற்று அதிகமாவே உள்ளதையும் பார்க்க முடிகிறது. இதனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கோடணி முடிவில் மாற்றம் வரலாம்.