அமைச்சர் பதவி பிரச்சனையால் அதிமுக மீண்டும் உடைகிறதா?

0
202

அமைச்சர் பதவி பிரச்சனையால் அதிமுக மீண்டும் உடைகிறதா?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் தேசிய அளவில் அதிமுக,பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்து மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியை தொடரவுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படு தோல்வியை சந்தித்த அதிமுக கூட்டணி கட்சிகள் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் மாநிலங்களவை உறுப்பினர் மூலம் அமைச்சர் ஆகும் வாய்ப்பை பற்றி ஒவ்வொரு கட்சியும் சிந்தித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பதவியை தராமல் விட்டால் அதிமுக கட்சியை உடைப்பேன் என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,வைத்திலிங்கம் மிரட்டல் விடுத்து உள்ளார். இது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்காக பாமக,பாஜக மற்றும் தேமுதிக உடன் அமைந்த கூட்டணியை வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் ஆகியோர்களை கொண்ட நால்வர் அணியை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சியின் முக்கியமான நடவடிக்கைகளை கவனித்து வந்தார். இவர்களும், கட்சி சம்பந்தமான முக்கிய முடிவைகளை எடுத்து செயல்படுத்தி வந்தனர். இந்த நால்வரும் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் இருந்தனர். ஜெயலலிதாவின் அறிவுரைப்படி கட்சியினருக்கு அறிவுரைகளை வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் ஜெயலலிதா அவருக்கு மாநிலங்களவை எம்பி பொறுப்பையும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் வழங்கினார். அந்த அளவுக்கு ஜெயலலிதா, வைத்திலிங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா காலமானார். அதன்பிறகு, அதிமுக சசிகலா, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. அந்த நேரத்தில் கூட சசிகலா அணியில் தான் இருந்தார். இந்த நிலையில் சசிகலா சிறை சென்ற பிறகு, ஓபிஎஸ், இபிஎஸ் அணியாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். அப்போதும் கூட இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

மேலும் படிக்க :
தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி மீண்டும் இணைந்தது. அதன்பிறகு கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியில் முடிவெடுக்குக்கும் குழுவிலும் முக்கிய நபராக உள்ளார். இந்த நிலையில் வைத்திலிங்கத்தின் ஆலோசனையின் படி தான் டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தமிழக அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் இம்முறை தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளார்.
ஆனால், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதேபோல் அதிமுகவில் மாநிலங்களவை எம்பியாக உள்ள ஒன்று அல்லது 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி, தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை வைத்துள்ளார்.

ADMK Will Devide Due to Minister Post Issue-News4 Tamil Online Tamil News Today
ADMK Will Devide Due to Minister Post Issue-News4 Tamil Online Tamil News Today

இதற்கிடையே ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மாநிலங்களவை எம்பியாக வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இதில் வைத்திலிங்கம் சீனியர். அவருக்கு அமைச்சர் பதவி கேட்டும், ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என ஓபிஎஸ், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை உடைப்பேன் என்று வைத்திலிங்கம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்,இதற்காக வைத்திலிங்கமும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியில் சீனியர் எம்பியான எனக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்று வைத்திலிங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை உடைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :
ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக.

ஏற்கனவே அதிமுக இரண்டாக உடைந்ததால் டெல்டா மாவட்டங்களில் பலவீனமடைந்துள்ளது. இந்த நிலையில் வைத்திலிங்கம் மீண்டும் கட்சியை உடைத்தால் டெல்டா மாவட்டங்களில் அதிமுக காணாமல் போகும் நிலை ஏற்படும். இது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :
சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

Previous articleதருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?
Next articleதொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி