அதிமுகவிற்கு அதிக ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்த திமுகவினர்! நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியதால் உடன்பிறப்புகள் அதிர்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரஸ், அதன் சார்பாகப் போட்டியிட்ட சென்னையில் இருந்தாலும் மண்ணின் மைந்தன் என்று சொல்லி தனது செல்வாக்கு மூலம் போட்டியிட்ட ரூபி மனோகரன் அவர்கள் தோல்வியடைந்தார்.
அவரை எதிர்த்து களம் இறங்கிய அ.தி.மு.க வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் 30 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்,. வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்று முடிந்துவிட்டது,.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு திமுகவினர் சரிவர ஒத்துழைப்பு தரவில்லை, ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பல நிர்வாகிகள் செயல்படாமல் இருந்துவிட்டார்கள் எனவும், ரூபி மனோகரன் அவர்களால் தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணத்தை செலவழிக்காமல் தனது சொந்த செலவுக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் திமுக மீது காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டு ஆகும்.
தோல்வி விரக்தியில் இருந்து இன்னும் மீளாத திமுக மற்றும் காங்கிரஸ், நாங்குநேரி தொகுதியில் திடிரென ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், அம்மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,. ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘நாங்குநேரி இடைத்தேர்தலில் களக்காடு பேரூராட்சியில் அ.தி.மு.க-வுக்கு அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்த தி.மு.க பிரமுகர்கள் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், சிவபத்மநாபன், வஹாப் ஆகியோருக்கு நன்றி’ என குறிப்பிட்டு இருக்கிறது.
போஸ்டரில் குறிப்பிட்டிருக்கும் நபர்கள் திமுக நெல்லை மாநகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், மேற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் ஆகியோர் தான்,. இடைத்தேர்தலின்போது களக்காடு பேரூராட்சிக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை குறிப்பிட்டு குற்றச்சாட்டு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, இதற்கு பின்னால் அம்மாவட்ட அமைச்சர் சொல்லி தான் அதிமுகவினரே இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர் என்றும் திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்,.
தோல்வி குறித்து திமுகவினர் வழக்கம்போல், ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தார்கள் என்றும் அவர்களுக்கு ஈடு கொடுக்க எங்களால் முடியவில்லை இதனால்தான் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பேரூராட்சியில் தங்களால் அதிகம் வாக்குகள் வாங்க முடியவில்லை என்று புலம்புகின்றனர்.
இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இம்மாவட்டத்தை கலக்கி வருகின்றன,. அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு சமூக வலைத்தள வாசிகள் தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வருகின்றனர்.