ADMK+TVK: விஜய் வாக்கு வாங்கி எங்களுக்குத்தான்.. பேச்சு வார்த்தை நடத்தும் அதிமுக மாஜி!! வெளியான பரபரப்பு தகவல்!! 

0
367
ADMK+TVK: Vijay votes for us.. Former ADMK leader talks!! Exciting information released!!
ADMK+TVK: Vijay votes for us.. Former ADMK leader talks!! Exciting information released!!

ADMK+TVK: விஜய் வாக்கு வாங்கி எங்களுக்குத்தான்.. பேச்சு வார்த்தை நடத்தும் அதிமுக மாஜி!! வெளியான பரபரப்பு தகவல்!!

நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.அந்த வகையில் இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது குறித்து பலரது எதிர்பார்ப்பு உள்ளது. இவரது ட்விட்டர் போஸ்டரில் அதிகப்படியாக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்.ஆனால் முதன்முறையாக திமுகவிற்கு எதிராக இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கருப்பு கொடி தூக்கியுள்ளார்.

மேலும் நேரடியாக சென்று ஆய்வும் மேற்கொண்டார்.இதனை வைத்து இவர் ஆளும் கட்சியுடன் கட்டாயம் கூட்டணி வைக்க மாட்டார் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல நாம் தமிழர் கட்சி சீமான் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் அவர்களை தனித்துவமாக சுட்டி காட்டி நன்றி தெரிவித்தார்.ஆனால் விஜய்யை மட்டும் அதில் குறிப்பிடாமல் இருந்தார்.இதுகுறித்து பலரும் கூட்டணி முறிந்ததாக பேசி வந்தனர்.இந்நிலையில் இவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று தற்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து அதிமுக மாஜி அமைச்சர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறுகின்றனர்.கடந்த தேர்தலில்  23 சதவீதம் பெற்று தோல்வி சந்தித்த அதிமுக, தற்பொழுது தவெக உடன் கூட்டணி வைத்தால் கட்டாயம் வெற்றிபெற முடியும் என்று எண்ணுகிறதாம்.குறிப்பாக ஆந்திர அரசியலில் மாற்றம் ஏற்பட்டது போலவே விஜய் வைத்து தமிழக அரசியலை புரட்டிப்போட்டு விடலாம் என்ற எண்ணத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Previous articleஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து! 
Next articleFLASH: சபாநாயகர் அப்பாவு மீது கிரிமினல் வழக்கு.. உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி!!