மீண்டும் நம்பர் 1 பணக்காரர் இடத்திற்கு முன்னேற்றம்! எலான் மஸ்க் சாதனை!!

Photo of author

By Sakthi

மீண்டும் நம்பர் 1 பணக்காரர் இடத்திற்கு முன்னேற்றம்! எலான் மஸ்க் சாதனை!!

Sakthi

மீண்டும் நம்பர் 1 பணக்காரர் இடத்திற்கு முன்னேற்றம்! எலான் மஸ்க் சாதனை!

டெஸ்லா இன்க் நிறுனத்தின் தைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் அவர்கள் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார். எலான் மஸ்க் அவர்கள் பெர்னார்ட் அர்னால்ட் அவர்களை பின்னுக்கு தள்ளி மீண்டும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கடந்த மே 31ம் தேதி அர்னால்ட் LVMH நிறுனத்தின் பங்குகள் 2.6 சதவீதம் சரியத் தொடங்கியது. இதையடுத்து பணக்காரர்களின் பட்டியலில் மாற்றம் நடந்திருக்கின்றது.

அர்னால்ட் LVMH நிறுனத்தின் உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட் அவர்களுக்கும் டெஸ்லா இங்க் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் அவர்களுக்கும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உலகின் நம்பர் 1 பணக்காரர் யார் என்ற போட்டி நிலவி வந்தது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெர்னார்ட் அர்னால்ட் அவர்கள் எலான் மஸ்க் அவர்களை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து அர்னால்ட் LVMH நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கியது. ஒரு சமயத்தில் அர்னால்ட் அவர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் சரிந்தது. மறுபுறத்தில் எலான் மஸ்க் அவர்கள் 55.3 பில்லியன் டாலர்கள் வருமானம் இந்த ஆண்டு ஈட்டியுள்ளார். இதையடுத்து எலான் மஸ்க் அவர்கள் பெர்னார்ட் அர்னால்ட் அவர்களை பின்னுக்குத் தள்ளி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அர்னால்ட் LVMH நிறுவனத்தின் உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட் அவர்களின் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில் டெஸ்லா இங்க் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அவர்களின் சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலராக இருக்கிறது.