பாதிக்கப்பட்ட மக்களை காண கார் டாப்பில் சாகசம்! ஹீரோவை அடுத்து அரசியல்வாதியாக பப்லிசிட்டி தேடும் டாப் ஹீரோ!
சினிமா துறையை சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைந்து அங்கேயும் பல சாகசங்களை காட்டுகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதி மற்றும் நடிகருமான பவன் கல்யாண் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சாலை விரிவாக்க பணிக்காக அங்கிருந்த வீடுகளை அரசே இடித்து தகர்த்தியது. இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜனசேன கட்சியின் தலைவர் பவன் கல்யாண் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
கண்டனம் தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை காண்பதற்காக காரில் சென்றுள்ளார். எப்படி நமது தமிழகத்தில் வாக்களிக்க முன்னணி ஹீரோக்களில் முக்கியமான நபரான ,தளபதி விஜய் சைக்கிளில் சென்றாரோ, அதேபோல இவர் காரின் டாப்பில் உட்கார்ந்து சென்றுள்ளார். இதனை பலரும் வீடியோ எடுத்துள்ளனர். இவர் அவ்வூர் மக்களை காண்பதற்காக,காரில் மேற்கூரையில் அமர்ந்து சென்றுள்ளார்.
இவரை சுற்றி வலது பக்கம் மற்றும் இடது பக்கம் பலர் தொங்கியபடி சென்றனர். அதிலும் ஒருவர் வீடியோ எடுத்தபடி அக்காரில் தொங்கிக் கொண்டே சென்றார். இவ்வாறு இவர் காரின் மேற்குறையில் அமர்ந்து வருவதை அறிந்த காவல் துறையினர் , மங்கலகிரி என்ற பகுதியில் அவரை தடுத்து நிறுத்தினார். பின்பு அவர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.அவ்வாறு அவர் சந்தித்த வீடியோவை ட்ரான் மூலம் படம் எடுத்தனர்.
பலரும் பவன் கல்யாண் செய்த இந்த செயலுக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் இவர் சாலை விதிமுறைகளை மீறிவிட்டார் என்று கூறுகின்றனர். அரசியல்வாதி மக்களுக்கு ஓர் முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர ஆக்சன் ஹீரோவாக இல்லை என்றும் கூறுகின்றனர்.