நயினார் அதிகாரத்தில் கை வைக்கும் பாஜக தலைமை!! அண்ணாமலை தலைக்கு போகும் கிரீடம்!!

0
202
Advice to give Nayanar power to Annamalai
Advice to give Nayanar power to Annamalai

BJP: பாஜக தமிழக தலைமை பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி கொடுப்பதாக பேசி கொண்டார்கள், ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே சமயம் அண்ணாமலையின் நாற்காலிக்கு நயினார் நாகேந்திரன் வந்தார். இதை அறவே பிடிக்காத நிர்வாகிகள் சரிவர அவரை மதிப்பதில்லை. இது ரீதியானக குமுறலை கூட பொது நிகழ்ச்சி ஒன்றில் நயினார் தெரிவித்திருப்பார். அதாவது எனக்கு நிர்வாகிகள் குறைந்தபட்சம் மரியாதை கூட தருவதில்லை என கூறியுள்ளார். அதேபோல தமிழகத்தில் வாக்கு சதவீதம் பாஜகவிற்கு அதிகரித்து இருக்கிறது என்றால் அதன் முக்கிய பங்கு அண்ணாமலையை தான் சாரும்.

அப்படி இருக்கையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நயினாரால் அந்த வாக்கு சதவீதத்தை எடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அதனால் மத்தியில் ரகசிய ஆலோசனை இது ரீதியாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவியை தாண்டி ஒரு முக்கிய பொறுப்பை அண்ணாமலைக்கு வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.

அதன்படி கட்சிக்குள் செயல் தலைவராக மட்டும் நயினார் இருந்தால் போதும் முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் அண்ணாமலை பார்த்துக்கொள்வாராம். ஆனால் இதனை நயினார் ஒப்புக்கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous articleரீ என்ட்ரி கொடுக்கும் நால்வர் அணி.. அச்சத்தில் இபிஎஸ்.. அமித்ஷா போட்ட பிளான்!!
Next articleதிமுகவுடன் இணையப்போகிறேன்??.. அதிமுக முக்கிய புள்ளி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!