கூகுள் ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களால் பாதிப்பு:?அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை

Photo of author

By Parthipan K

அமேசான், கூகுள் ,ஆப்பிள் பேஸ்புக் ஆகிய நிறுவனக்களை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை செய்தது.காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், இந்நிறுவனங்கள் மட்டுமே 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களான அமேசான், ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை முடக்கி, மக்களிடையே தேர்வு செய்யும் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.இதனால் சிறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.இதுபோன்ற கேள்விகளை நாடாளுமன்ற குழுவினர் சரமாரியாக சுமத்தினர் .

ஆனால் அமேசான் கூகுள் ஆப்பிள் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது.அமெரிக்காவை மட்டுமே சார்ந்த நிறுவனம் செயல் படவில்லை என்றும் உலகமெங்கும் செயல்படுவதால் தங்களது வளர்ச்சி பிடிக்காமல் இப்படி குற்றச்சாட்டு எழுவதாக அந்நிறுவனம் கருத்து தெரிவித்தது.

கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிறுவனம் தங்களது பங்குகளை நிறைய நிறுவனங்களிடம் வழங்கியதால் இதன் பயன்பாடு அதிகமாகவே காணப்படும். இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் பங்குகளை கொண்டு பேஸ்புக் தனது வளர்ச்சியை கண்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.