மகள் மீது கொண்ட பாசத்தால் தந்தை எடுத்த விபரீத முடிவு!

Photo of author

By Sakthi

தேனி மாவட்டம் கம்பம் மின்சார வாரிய அலுவலக சாலையை சார்ந்தவர் முருகன் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மகள் இருக்கிறார்கள். முருகன் தன்னுடைய மகள் மீது அதீத பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அவருடைய மகளை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கல்லாரில் திருமணம் செய்து அனுப்பியிருந்தார். அங்கே மகள் கணவர் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில், குடும்பத் தகராறில் முருகனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

இதனைக் கேள்விப்பட்ட அவருடைய குடும்பத்தார் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்தார்கள் . இதற்கிடையில் மகளின் இறப்பை தாங்கமுடியாத முருகன் நேற்று வீட்டில் யாருமற்ற நேரத்தில் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

அதன் பிறகு அக்கம்பக்கத்தினர் அதனைப் பார்த்துவிட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றார்கள். அங்கு முருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

மகள் மீது வைத்த அதீத அன்பு காரணமாக ,அவர் தற்கொலை செய்து கொண்டதால் அந்தப் பகுதி மக்கள் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.