ஆப்கானிஸ்தான் விவகாரம்! மவுனம் கலைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Photo of author

By Sakthi

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட அந்த நாடு முழுவதையும் தலிபான் பயங்கரவாத இயக்கம் கைப்பற்றி இருக்கின்ற சூழலில் அதன் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியா முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் எதிரொலித்து வருகிறது.2001ஆம் ஆண்டு அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானில் அடைக்கலம் கொடுத்த சூழலில் அவரை கொன்று தாலிபான்களை ஒடுக்கியது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ராணுவம் 20 ஆண்டுகள் சென்ற நிலையில் இன்று அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகள் தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த காபூலில் இருந்து வேகமாக தப்பித்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலிலும் ஆப்கான் முக்கிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது. புதிய அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை சரியாக கையாள தவறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய நேரப்படி இன்று இரவு ஒன்றரை மணி அளவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் தொடர்பாக தன்னுடைய மௌனத்தை கலைத்து இருக்கின்றார்.

வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜோ பைடன் என்னுடைய முடிவுக்குப் பின்னால் நான் உறுதியாக இருக்கின்றேன் 20 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க படைகளை திரும்ப பெற இது சரியான நேரம் இல்லை ஆனாலும் திரும்பப் பெறுவதில் நான் உறுதியாக இருக்கின்றேன் அமெரிக்கத் துருப்புகள் வெளியேறினாலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அதிபர் ஜோ பைடன்.

தற்போதைய ஆப்கானிஸ்தான் நிலைக்கு 20 ஆண்டுகளாக அங்கு இருக்கின்ற அந்த நாட்டு ஆட்சியாளர்களும் ராணுவம் தான் காரணம் அவர்களே ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடம் பெற்றுக் கொடுத்து விட்டார்கள். ஒரு சில பகுதிகளில் ராணுவம் நிலை குலைந்து போய் தாலிபான்களுடன் போரிடவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அதிபர் ஜோ பைடன்.அவர்களுடைய சொந்த எதிர்காலத்தை முடிவு செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் அவர்களுக்கு கொடுத்தோம் அந்த எதிர்காலத்திற்காக போராடுவதற்கான விருப்பத்தை எங்களால் அவர்களுக்கு வழங்க இயலவில்லை.

ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்புவதையோ அங்கு ஜனநாயகத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா எப்போதும் தன் வேலையாக வைத்திருக்கவில்லை. இன்னொருமுறை பயங்கரவாதத் தாக்குதல் அமெரிக்க மண்ணில் நடக்காமல் தடுப்பதற்காகவே நாம் அங்கே நிலைகொண்டு இருந்தோம் என தெரிவித்து இருக்கிறார் அதிபர் ஜோ பைடன்.

நம்முடைய நாட்டு நலன் இல்லாத மோதலில் ராணுவத்தினரை காலவரையின்றி தங்கவைத்து போராடுவது ஒரு வெளிநாட்டு நாட்டில் உள்நாட்டுப் போரை இரட்டிப்பாக்குவது அமெரிக்க படைகளின் முடிவில்லாத ராணுவ பாதுகாப்பின் மூலம் ஒரு நாட்டை திரும்ப கட்டமைக்க முயற்சி செய்வது போன்ற கடந்த கால தவறுகளை இனி செய்யமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.