எலி ஒரு சூப்பர் ஹீரோ! தங்கப்பதக்கம் வென்ற எலி!

Photo of author

By Kowsalya

கம்போடிய நாட்டில் கன்னிவெடிகளை அகற்றி எலிக்கு சாதனை புரிந்துள்ளது. அந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளது கம்போடியா நாடு. இந்த நிகழ்வு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கம்போடியா நாட்டில் பாதுகாப்புக்காக 5 மில்லியன் வரை கன்னி வெடிகள் புதைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கன்னிவெடிகளால் 64 ஆயிரம் பேருக்குமேல் இறந்துள்ளனர். இதனால், கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக கன்னிவெடிகளை அகற்றி வரும் பணியை மேற்கொண்டு வருகிறது.

கன்னிவெடிகளை அகற்றுவதில் மக்கள் ஈடுபட்டால் மக்கள் இறக்கும் அபாயம் இருப்பதனால் விலங்குகளை பயன்படுத்த கம்போடியா நாடு எண்ணியது.

அப்பொழுதுதான் ஆப்பிரிக்கா எலி கன்னிவெடிகளை அகற்றுவதில் திறமை வாய்ந்ததாக உள்ளது என்ற விஷயம் கம்போடியா நாட்டுக்கு தெரியவந்துள்ளது.

கன்னிவெடிகளை அகற்றுவதற்காகவே மாகவா எலி பயிற்சியும் எடுத்துள்ளது.

அந்த மாகவா எலியால் 30 நிமிடங்களில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவு நிலத்தை தேட முடியும்.

எலியை கம்போடியா கொண்டு வந்த கடந்த ஏழு வருடங்களில் 39 கன்னிவெடிகளை அகற்றியுள்ளது. வெடிக்காத 28 கன்னிவெடிகளையும் மாகவா எலி அகற்றியுள்ளது.

இந்த எலியின் அரும்பணியை பாராட்டும் விதமாக இங்கிலாந்தின் கால்நடை அமைப்பு மாகவா எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கியுள்ளது. “மாகவா எலி ஒரு சூப்பர் ஹீரோ. மனிதர்களை காப்பாற்றுவதில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டது” என்றும் பாராட்டியுள்ளது.

இந்த வகை எலிகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அறக்கட்டளையின் 77 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற விருதைப் பெற்ற முதல் எலி மாகவா எலி ஆகும்.