இதை தேய்த்த 2 நிமிடங்களில் உங்கள் பாதம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும்!!

0
34

இதை தேய்த்த 2 நிமிடங்களில் உங்கள் பாதம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும்!!

இந்த பதிவில் அருமையான வீட்டில் செய்யக்கூடிய ஒரு ரெமிடியை பற்றி அறிந்து கொள்வோம். பல பேர் தன்னுடைய முகத்திற்கு காட்டக்கூடிய அக்கறையை பாதத்திற்கு காட்டுவதில்லை.

முகம் அழகாக பளிச்சென்று காணப்படும் ஆனால் அவர்களுடைய கால்கள் கருமையாக காணப்படும் குறிப்பாக பாதங்கள் மிகவும் கருப்பாக காணப்படும். இவ்வாறு கருப்பாக இருக்கக்கூடிய பாதங்களை ஐந்தே நிமிடத்தில் வெள்ளையாக மாற்றுவதற்கான ஒரு சுலபமான வீட்டில் செய்யக்கூடிய ரெமிடியை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
எலுமிச்சை சாறு
பேக்கிங் சோடா

செய்முறை:
இப்போது ஒரு பௌலில் ஒரு தேக்கரண்டிக்கு குறைவாக தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பாதி அளவு எலுமிச்சை பழ சாறை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

இந்த பேக்கிங் சோடாவை சேர்த்தவுடன் நுரை பொங்கி வரும். இந்த நுரை அடங்குவதற்குள் அதனை எடுத்து நம் கால்களின் கருமை இருக்க கூடிய பகுதிகளில் தேய்த்துக் கொள்ளவும். காலின் பாதங்கள் கால் முட்டிகள் கைமுட்டிகள் என கருமையாக இருக்கும் இடங்களில் அனைத்திலும் இதை தேய்த்து வரலாம்.

இந்த ரெமிடியை கை கால்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. இதை தடவி மூன்று நிமிடங்களுக்கு அப்படியே உலர விடவும். பிறகு மூன்று நிமிடங்கள் கழித்து மறுபடியும் இதை எடுத்து தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்கு தேய்த்த பிறகு தண்ணீரில் கை கால்களை கழுவி விடவும். இந்த முறையை தினமும் பண்ண கூடாது.

வாரத்தில் இரண்டு முறை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இதை செய்ய வேண்டும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. பக்க விளைவு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இதை தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு இதை செய்வதால் கால்களில் இருக்கக்கூடிய அழுக்குகள் கரும்புள்ளிகள் கரும்திட்டுக்கள் கருமைகள் அனைத்தும் நீங்கிவிடும். மேலும் கால் மற்றும் கைகளில் இருக்கக்கூடிய முட்டிகள் கருப்பாக இருந்தால் அதற்கும் இதை தேய்த்து வர உடனடியாக தீர்வை கொடுக்கும். இதை வாரத்திற்கு இருமுறை மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வரலாம்.

இந்த நிமிடியை தடவி ஐந்து நிமிடங்களில் உங்களுக்கே மாற்றங்கள் புரியும். எனவே செயற்கையாக அழகு நிலையங்களில் இது போன்ற ப்ளீச்சிங் செய்முறைகளை செய்யாமல் வீட்டிலேயே இயற்கையான முறையில் இதை செய்ய உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

author avatar
CineDesk