ஆன்லைன் யுகத்தில் சோசியல் மீடியா இல்லை என்றால் எதுவுமே சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப்,டெலிகிராம் போன்ற செயலிகள் குறுச்செய்திகளை பகிர்ந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்றிரவு வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது பதற்றைத்தை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் 200 கோடி பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது. செய்திகள்,வீடியோ, புகைப்படம், வீடியோ கால் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும் வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் நடத்தி வருகிறது. ஏற்கனவே வாட்ஸ் அப் மீது பாதுகாப்பு அம்சங்களில் பயனாளர்கள் பல்வேறு குறைகளை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் வாட்ஸ் அப் சேவை ஒரே நேரத்தில் முடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் #whatsappdown #facebookdown ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப் சேவைகள் முடங்கியதாக கூறப்பட்ட நிலையில், 43 நிமிடங்கள் கழிந்து சேவை மீண்டும் தொடங்கியது. அந்த இடைப்பட்ட காலத்தில் சேவை இல்லாததாலேயே பயனாளர்கள் பரிதவித்து போனது குறிப்பிடத்தக்கது.