கடும் எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் தொடரும் ராமர் சிலை?

Photo of author

By Parthipan K

2017ஆம்ஆண்டு உத்தர பிரதேஷம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றபோது 251 மீட்டர் உயர ராமர் சிலையை சராயு நதிக்கரையில் எழுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனோடு ராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த சிலையோடு ,ஒரு அருங்காட்சியகம் தொடங்குவதாக திட்டமிட்டார்.

பதவியேற்று மூன்று வருடம் ஆன போதிலும், இன்னும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

சர்தார் வல்லபாய் படேலின் சிலை 183 மீட்டர் உயரத்தை விட உயரமான சிலை அமைப்பதால் ராமர் சிலை திட்டத்தில் சுமார் 3000 கோடி வரையில் செலவாகும் என கருதப்படுகிறது.அயோத்தி ராமர் சிலையுடன் ,இந்தப் பெரிய ராமர்சிலை இன்னொரு மைல்கல்லாக பரிசீலக்கப்படுகிறது.

கோவில் கட்டும் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதில் உள்ளூர்வாசிகள், விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இதனால் நிர்வாகமும் நிலத்தை தேர்வு செய்யும் பணியில் தாமதம் ஏற்படுகிறது.மஜ்ஹா பர்ஹதா மற்றும் இதன் சுற்றியுள்ள கிராமங்களில் 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிக்கை ஒன்றை விட்டது .

நில கையகப்படுத்தால் 125 குடும்பங்களும் , 66 நிரந்தர வீடுகளும் பாதிக்கப்படுவதால் மக்களை ஆட்சேபணையைப் பதிவு செய்ய கோரியிருந்தது.இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் ,அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கு நீதிமன்றம் 2013 -ஆம் ஆண்டு நிலக் கையகப்படுத்தல் வழிமுறைகளை பின்பற்ற யுபி அரசுக்கு உத்தரவிட்டது .இந்த சட்டத்தின்படி உரிமையாளர்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆனால் 15 நாட்களே அளிக்கப்பட்டது. இதனால் நிர்வாகத்துக்கு விவசாயிகளிடமிருந்து சுமார் 200 -க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

இந்த பிரச்சனைகள் நடந்துவரும் நிலையில், யூபி அரசு கடந்த வருடம் நவம்பரில் சிலைக்காக 61 ஹக்டேர் நிலத்தை வாங்க ரூபாய். 447 கோடியை ஒதுக்கியது. இந்தத் திட்டத்துக்காக முதலில் ரூபாய் 200 கோடியை செலவு செய்ய வெளியுட்டுள்ளது.

சுமூகமாக முறையில் பிரச்சினையை தீர்த்து உலகமாக ராமர் சிலையை வடிவமைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டு வருகிறது.