ஓராண்டுகள் கழித்து தான் மின்வாரிய தேர்வு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இரண்டு வருட காலமாக கொரோனா தொற்று அதிக அளவில் காணப்பட்டதால் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதனையடுத்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினாலும் தேர்வுகள் நடைபெறாமல் போனது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தான் அனைத்து அரசு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்பு பின்பற்றி வந்த நேரடி ஆட்சேர்ப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இனி டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் கீழ் பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என கூறினர்.
இந்த அறிவிப்பானது பழைய விண்ணப்ப படிவத்தின் கீழ் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மதிப்பீட்டாளர்கள் ,இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் என மொத்தம் 5,318 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் பணி நியமனம் செய்யப்படுவர் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இதனை மின்சார வாரியம் ரத்து செய்துள்ளது. ரத்து செய்தது குறித்து அனைவரிடமிருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்து வந்துள்ளது.
மேலும் தேர்வு கட்டணமாக அனைவரிடமும் 1200 வசூல் செய்தனர். தற்பொழுது நேரடி ஆட்சேர்ப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் பணம் திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் நியமனம் செய்வது குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், இது அறியாது முன்னதாக விண்ணப்பித்தவர்கள் பெரும் ஏமாற்றத்தையே அடைவார்கள் என கூறுகின்றனர். இது குறித்து பல அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மின்வாரிய தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளிவந்து இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால் தேர்வு ஏதும் நடைபெறவில்லை.அவ்வாறு அத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் காத்திருந்து வேலை கிடைக்காமல் உள்ளனர்.தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துவதால் இன்னும் ஓராண்டு கழித்து தான் தேர்வு நடைபெறும். அதனால் விண்ணப்பித்திருந்து காத்திருப்பவர்களின் நிலை மேலும் வருத்தத்திற்குரியதாக காணப்படும். இந்த தேர்வை நம்பி வேலையில்லாமல் காத்திருந்து மனவேதனைக்கு தள்ளப்படுவர் என கூறுகின்றனர்.