பெருத்த நஷ்டத்துக்குப் பின் மீண்டும் களமிறங்கும் தனுஷ்… அடுத்தடுத்து 3 படங்கள் தயாரிப்பு!

Photo of author

By Vinoth

பெருத்த நஷ்டத்துக்குப் பின் மீண்டும் களமிறங்கும் தனுஷ்… அடுத்தடுத்து 3 படங்கள் தயாரிப்பு!

நடிகர் தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல படங்களை தயாரித்து வந்தார். கடைசியாக அவர் தயாரித்த திரைப்படம் காலா.

தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் மற்றும் தி கிரே மேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்நிலையில் சில வருடங்களாக செயலற்று இருந்த தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் “வேலையில்லா பட்டதாரி, எதிர்நீச்சல், மாரி மற்றும் வடசென்னை ஆகிய படங்களை தயாரித்தார்.

கடைசியாக ரஜினிகாந்த் இயக்கத்தில் பா ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படத்தை தயாரித்தார். அந்த படத்தின் மூலமாக அவருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக சொலல்ப்படுகிறது.

அதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. பிற நிறுவனங்களுக்காக படங்களை நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் மீண்டும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த நிறுவனத்தின் மூலம் மூன்று படங்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனறும் சொல்லப் படுகிறது.