Thiruvarur: திருவாரூர் மாவட்டத்தில் உப்பூர் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டியில் விஷம் கலந்துலதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்தில் மக்கள் உபயோகிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த செய்தியானது தற்பொழுது வரை ஆறாமல் உள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, உப்பூர் என்ற வட்டத்தில் குடிநீர் தேக்க தொட்டிக்கு மேல் விஷம் கலந்த நெற்பயிர்கள் இருந்துள்ளது. இதனை சாப்பிட்ட புறா மற்றும் காகம் உள்ளிட்ட உயிரினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துள்ளது.
இந்த தொட்டியின் மேல் விஷம் கலந்த நெற்பயிர்களை யார் வைத்திருப்பார், மேற்கொண்டு அந்த விஷம் தண்ணீரிலும் கலந்துள்ளதா என்று பொதுமக்கள் சந்தேகத்தில் உள்ளனர்.அதுமட்டுமின்றி இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததுடன் மேற்கொண்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. நெற்பயிர்கள் உண்டு பறவைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த தண்ணீரை மக்கள் உபயோகிக்காததால் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
அதுமட்டுமின்றி நீர் தேக்க தொட்டியிலிருந்த தண்ணீரானது மக்கள் உபயோகம் செய்ய முடியாத வகையில் கீழே திறந்துவிட்டுள்ளனர். ஆனால் குடிநீர் தொட்டியில் இப்படி விஷம் ,மனிதக்கழிவு உள்ளிட்டவை கலப்பது குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.