நயன்தாராவை அடுத்து Netflix யில் வெளியாகும் அடுத்த ஹீரோயினின் கல்யாண வீடியோ!!

Photo of author

By Rupa

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வளர்ந்து வரும் நிலையில் தனது விடா முயற்சியால் படிப்படியாக முன்னேறி மக்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. பொதுவாக நடிகைகளுக்கு பாய்ஸ் ஃபேன் பேஸ் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இவருக்கு அதே அளவிலான கேர்ள்ஸ் ஃபேன் பேஸும் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறமையால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

“நானும் ரவுடிதான்” படத்தின் மூலம் நயன்தாராவும் அந்தப் படத்தின் டைரக்டரான விக்னேஷ் சிவனும் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் நடைபெற்று 2 ஆண்டுகள் சென்ற பிறகு அந்தத் திருமண வீடியோவை “நெட் பிளிக்ஸ் ஒடிடி தளம்” வாங்கி வெளியிட்டது. இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர்களின் பாராட்டுகளைக் கூறி வருகின்றனர். இந்த வீடியோ வெளியாக இருந்த 2 நாட்களுக்கு முன்புதான் நயன்தாரா தனுஷை குற்றம் சாட்டிய விவகாரம் இணையதளத்தில் வைரலாகப் பரவியது. இந்த காரணத்தால்தான் இவர்களின் திருமண வீடியோ ஃபேமஸானது என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இவர்களின் திருமணம் டிசம்பர், 4 2024 அன்று நடைபெற உள்ள நிலையில் இந்தத் திருமண வீடியோவின் உரிமையை நெட் பிளிக்ஸ் ரூ. 50 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாக சைதன்யாவின் இந்தத் திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என்பதால் வருகின்ற ஜனவரி மாதத்தில் இந்த வீடியோ நெட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்று பலரின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.