சச்சினுக்கு பிறகு இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும் ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!!
இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரானின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மும்பையை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இவர் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர். தற்போது 73 வயது ஆகும் மூத்த வீரரான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 125 டெஸ்ட் போட்டிகளில் 10122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பின்பு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து ஒன்றை கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் இந்திய அணியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை தான் பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். சச்சினுக்கு பிறகு உம்ரான் மாலிக்கின் செயல்பாட்டை பார்க்கவே நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். எனத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான 150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் திறன் பெற்றவர். ஐ.பி.எல் சீசன் போட்டிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டு இந்திய அணியின் சர்வதேச போட்டிகளில் விளையாட தேர்வானவர். ஐ.பி.எல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் இதுவரை 7 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.