தீபாவளி பண்டிகை முடித்து சென்னை வரும் பயணிகளுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் கிளாம்பாக்கத்தில்!!

Photo of author

By Vinoth

தீபாவளி பண்டிகை முடித்து சென்னை வரும் பயணிகளுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் கிளாம்பாக்கத்தில்!!

Vinoth

Updated on:

After the Diwali festival, special electric trains will be run in Klambacham for the passengers coming to Chennai!!

உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகள் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஓன்று தீபாவளி பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அனைவரும் ஆர்வமுடன் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி முடிந்து 4-ம் தேதி சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த பண்டிகை சுமார் 13 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ், ரயில், சொந்த கார், வாடகை கார், மேலும் விமானக்களிலும் சென்று இருக்கிறார்கள். தீபாவளிக்கு மறுநாளான இன்று (நவ. 1) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அதிகாலை சென்னைக்கு வர திட்டமிட்டு தங்கள் பகுதிகளிலிருந்து ரெயில்களிலும், சிறப்பு பஸ்களிலும் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நவம்பர் 4-ஆம்  தேதி அதிகாலை முதல் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்ட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரெயில் நிலையம் வரை சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. காட்டாங்குளத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை (நவ. 4) அதிகாலை 4 மணிக்கு முதல் ரெயில் புறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு அடுத்தடுத்து ரெயில்கள் புறப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் கூறப்பட்டுள்ளது.