நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது! காரணம் என்ன?

Photo of author

By Anand

நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது! காரணம் என்ன?

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கன்னியாகுமரி பக்கத்தில் உள்ள தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்பாட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பேசிய சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து குறித்தும், கேரள முதல்வர் பினரயி விஜயன் குறித்தும் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் உருவ கேலி செய்ததாகவும், அவர்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.இதனையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சாட்டை துரைமுருகன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.இதனையடுத்து அவரை அக்டோபர் 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.