மீண்டும் விலை உயர்த்தப்பட்ட சிலிண்டர்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

Photo of author

By Gayathri

தீபாவளி பண்டிகையின் பொழுது பல சலுகைகளை மக்களுக்கு வழங்கிய அரசு தீபாவளி முடிந்த நிலையில் இன்று கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதியில் கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த மாதமும் நவம்பர் 1 ஆம் தேதி ஆன இன்று எண்ணெய் நிறுவனத்தின் விவரங்களின்படி கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலையை, தற்போது பயன்பாட்டில் உள்ள விலையில் இருந்து ரூ.61.50 ஆக உயர்த்தி அறிவித்துள்ளன.அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1,964-க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விலை ஏற்றத்திற்கு முன்னதாக வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ₹ 1855 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான விலையில் தற்போது வரை எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.