நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல்!

Photo of author

By Savitha

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம். வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல்.

நாளை கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கோடைகாலத்தின் உச்சகட்ட வெப்பம் நாளை முதல் நமக்கு தெரியும். ஏனென்றால் நாளைமுதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கின்றது. நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கும் இந்த அக்னி வெயில் மே 29ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாக அதாவது வெயில் காலமாக கருதப்படும் பருவ காலத்தில் மே மாதம் மட்டும் வெயில் தாக்கம் அதிக அளவில் இருக்கும். மே மாதம் முழுவதும் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவது தான் இதற்கு காரணம்.

இந்த அக்னி நட்சத்திரம் தொடங்கி முடியும் வரை வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இருக்கும். அதாவது 100 டிகிரி முதல் 107 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும். அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் உஷாராகவும் இருங்கள்.