எதிர்ப்புகளை மீறி நிறைவேறிய விவசாய மசோதா திட்டங்கள் – ஆவேசத்தில் எதிர்க்கட்சிகள்!

Photo of author

By Parthipan K

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவசாயிகளின் உற்பத்தி வணிகமும் மற்றும் வர்த்தக மசோதா ( மேம்பாடும், வசதியும் ) 2020, அத்தியாவசிய பொருட்களின் மசோதா (  திருத்தம் ) 2020, விலை உறுதி செய்தல் மற்றும் பண்ணை மசோதா (  அதிகாரம் அளித்தலும், பாதுகாப்பும் ) 2020  ஆகிய மூன்று மசோதாக்களும் இன்று மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது.

அதனால் இன்று  இந்த மசோதாக்களை எதிர்த்து கடும் அமளி ஏற்பட்டது. ஆனால் மக்களவையில் பாஜக தனது தனி பெரும்பான்மை தன்மையைப் பயன்படுத்தி அனைத்து  மசோதாக்களையும் நிறைவேற்றியது. 

ஆனால் மாநிலங்களவையில் போதுமான  பெரும்பான்மை தன்மை இல்லாததால் பாஜக, கூட்டணி கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவை அளிக்கக்கோரி கேட்டது. 

மேலும் இந்த திட்டம் விவசாயிகளுக்கு எந்த ஒரு நன்மையும்  தராது என்றும் இத்திட்டம் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது என்றும் இதனால் விவசாயிகள் படும் துயரத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மேலும் விவசாயிகள் உரிய விலையை பெற பெரிதும் போராட வேண்டும் என்றும் பல எதிர்ப்புகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.