திராவிடர் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை ஒரு சிலவற்றை நிறைவேற்றி இருந்தாலும் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த ஒரு சில முக்கிய வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என்று சொல்லப்படுகிறது.
நோய்த்தொற்று நிவாரண தொகை பணமாக நான்காயிரம் ரூபாய் மற்றும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு, போன்ற வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட இருக்கிறது ஆனாலும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் ஆக 100 ரூபாய் வழங்கப்படும் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், விவசாய கடன் மற்றும் நகை கடன் கல்விக் கடன், தள்ளுபடி செய்யப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும், உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை எப்போது செயல்படுத்த இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் பயிர்க் கடன், மத்திய கால கடன்கள் ஆக மாற்றப்பட்டு நிலுவையில் இருக்கின்ற கடன் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல பதிவளர்களுக்கும் கூட்டுறவுத்துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அசல் வட்டி, அபராத வட்டி மற்ற செலவு விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் நகை மற்றும் விவசாய கடன்கள் விரைவில் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது.