ஆஹா! இந்த ராசிக்காரர்களா நீங்கள்? அப்போ இனிமே உங்களுக்கு யோகம் தான்!
கிரகங்களின் ராசி மாற்றம்:
வருகிற நவம்பர் 13, 2022 அன்று இரண்டு கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நீச்சம் பெறுகிறது. இந்த நீச்சத்தால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாற்றங்களையும், மற்ற அனைத்து ராசிகளிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். செவ்வாய் ரிஷப ராசியிலும் புதன் விருச்சிக ராசியிலும் நுழைவார்கள்.
யோகம் பெறும் ராசிகள்:
ரிஷப ராசி அன்பர்களே! உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் அயல்நாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களாயின் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.அவர்கள் உடல் நிலை சிறப்பாகவும் பல புதிய லாபங்களை பெறுவீர்கள்.
விருச்சக ராசி நேயர்களே! செவ்வாய் ஆறாம் வீட்டிற்கும் புதன் எட்டாம் வீட்டிற்கும் அதிபதிகளாக உள்ளனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.அதிகப்படியான பணவரவிற்கு வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசிக்காரர்கள்! இது உங்களுக்கு மிகவும் நல்ல நேரமாக இருக்கும்.உங்கள் ராசியில் ஏழு மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக புதன் இருப்பதால் சுப பலன்களை அளிக்கும், தொழிலிலும் வெற்றி காணலாம்.
மகர ராசி நேயர்களே! இந்த கிரக மாற்றம் மகர ராசியில் உள்ள மாணவர்களுக்கு ஏற்றதாக அமையும்.தேர்வில் நல்ல முடிவுகள் வரும் மேலும் ஆராய்ச்சி பணிகளில் தொடர்புடையவர்கள் இப்போது வெற்றி அவர்களின் பக்கம்.
கும்ப ராசிக்காரர்களே! உங்கள் ராசியின் 5 மற்றும் எட்டாம் வீடுகளுக்கு அதிபதியாக புதன் உள்ளார். உங்கள் பணிகளில் பலவித வெற்றிகளைக் காண உள்ளது. மேலும் வீட்டின் சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
கடக ராசி அன்பர்களே! உங்கள் கடின உழைப்பிற்கான வெற்றி இப்போது கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் பெருமை வந்து சேரும்.