ஆஹா! இந்த மாஸ்கில் இவ்வளவு நன்மைகளா? முகத்தை பொலிவாகும் பாலாடை மாஸ்க்…!
பெண்களின் சருமத்திற்கு பாலாடையை உவமையாக சொல்வது வழக்கம். பெண்களின் சருமத்திற்கு பாலாடை மிகச் சிறந்த பொலிவு மற்றும் சருமத்தில் உள்ள மாசுகளை மற்றும் எண்ணெய் பசைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாலை பஞ்சு அல்லது காட்டன் துணியால் தொட்டு முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினாலே முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்ற புது பொலிவுடன் இருக்கும்.
பாலாடையில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவினால் பேஷியல் செய்தாற்போல் பிரகாசமாக இருக்கும். மேலும் வறண்ட சருமத்தில் பாலாடையை தடவை வந்தால் சரும வறட்சி நீங்கும்.
எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு பாலாடை மற்றும் தயிர் கலந்து மாஸ்க் போல் போல் பயன்படுத்தலாம்.
பாலாடை பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள பெரிய துவாரங்கள் சிறியதாகும் முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்குகிறது.
பாலாடை உடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
பாலாடையுடன் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
ஒரு டீஸ்பூன் பாலாடை ஒரு டீஸ்பூன் தேன் சேர்ந்து முகத்தில் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
இவ்வாறு செய்து வருவதால் உங்கள் முகம் பளபளப்புடனும் வசீகரத்துடனும் இருக்கும்.