விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உதவித்தொகை கிடைக்கவில்லையா? இதைப் பண்ணுங்க

0
250

விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உதவித்தொகை கிடைக்கவில்லையா? இதைப் பண்ணுங்க

பிரதான் மந்திரி கிசான் பயனாளிகளுக்கு முக்கிய அப்டேட்!! விவசாயிகளுக்கு இனி AI சாட்பாட் சேவை!!

பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்ற திட்டம் விவசாயிகளுக்கான திட்டமாகும்.சிறுகுறு விவசாயிகள் தடையின்றி விவசாயம் செய்திட ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கபட்டு வருகிறது.அதாவது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்று மூன்று தவணைகளாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 17 தவணைகளை மத்திய அரசு நேரடியாக விவசாய பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளது.சில கட்டுப்பாடுகளால் கிட்டத்தட்ட 44,000 விவசாயிகள் 17வது தவணைத் தொகையை பெற முடியாமல் போனது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்ட பயனாளிகள் அனைவரும் e-KYCயை PM கிசான் செயலியின் வாயிலாக செய்து முடித்திருக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும் e-KYC செய்து முடிக்காத பயனாளிகளுக்கு இனி வரும் காலங்களில் தவணைத்தொகை வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்திருந்தது.அதன்படி 17வது தவணைத் தொகையின் போது e-KYC முடிக்காத பயனாளிகளுக்கு ரூ.2000 தவணைத் தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு “கிசான் இ-மித்ரா” என்ற AI சாட்போட் செயலியின் மூலம் தவணையைப் பெறாதவர்கள் புகார் பதிவு செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறது.AI சாட்போட் மூலம் பிஎம் கிசான் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு தங்கள் தாய்மொழியில் விடை பெற முடியும்.இந்த செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.பிஎம் கிசான் தொடர்பான துல்லியமான தகவல்களை இந்த செயலி வழங்குகிறது.