கூலியிலும் ஏஐ தொழில்நுட்பம்!! 4 – 5 ரஜினிகள் ஆர்வத்தைக் கூட்டும் லோகேஷ் கனகராஜ்!!

Photo of author

By Gayathri

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் கூலி. இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் முதல் சென்னையில் நடைபெற உள்ளது.

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் லோகேஷ் கனகராஜ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் எடுத்த அனைத்து படங்களும் இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்பொழுது இயக்கி வரும் கூலி திரைப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படத்திற்கான 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்பொழுது நடிகர் ரஜினி காந்த் மற்றும் ஹாலிவுட் நடிகர் அமீர்கான் பங்கேற்கும் முக்கிய சண்டை காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளன.

சண்டைக் காட்சிகளில் ரஜினிகாந்த் அவர்கள் ஈடுபடக் கூடாது என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் அவர்களுக்கு முதுமையின் காரணமாக சில வழிமுறைகளை பின்பற்றுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். எனவே லோகேஷ் கனகராஜ் அவர்களும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து எந்தவிதமான சண்டை காட்சிகளையும் படம்பிடிக்க மாட்டேன் என்றும் உறுதி கூறியுள்ளார்.

மேலும் இந்த கூலி திரைப்படத்தில் உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உட்பட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வழக்கமான லோகேஷ் கனகராஜன் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் படமாகவே அமையும் என்று இப்படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் 4 – 5 பேர் சுற்றி தெரிந்து வருகின்றனர். இதனை பார்க்கும் பொழுது ரஜினிகாந்த் தான் நடக்கிறாரோ என்று ரசிகர்கள் குழப்பம் அடைகின்றனர். தற்பொழுது இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.