வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்!

Photo of author

By Hasini

வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்!

வேலூரில் அதிமுக மாவட்ட செயலாளராக இ.கௌதம் உள்ளார். தற்போது அவரை நீக்கியதற்காக அதிமுகவின் இணை செயலாளர் மற்றும் துணை செயலாளர் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த இ.கவுதம் (குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர்) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.