TVK : அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ விலகியுள்ள நிலையில் தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை ஒன்பது மாதத்திற்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமித்ஷா எந்த தினத்தில் உறுதி செய்தாரோ அதே தினத்தில் தான் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இவர்கள் சந்தித்தது அவருக்கு நன்றி சொல்ல தான் எனக் கூறுகின்றனர்.
வப்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக மசோதா கொண்டுவரப்பட்டதற்காகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதற்காகவும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக முதல்வருக்கு நன்றி செலுத்தியுள்ளனர். இதனால் மட்டும்தான் ஸ்டாலினை சந்தித்தோம் மேற்கொண்டு எந்த ஒரு காரணம் இல்லை எனவும் கூறினர். அதேபோல அதிமுகவிற்கு அலார்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு எதிராக சட்ட மசோதா இயற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்டாயம் நாங்கள் அதில் இருக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.
அவர்கள் சொல்லியதைப் போலவே தற்போது கூட்டணியிலிருந்து விலகியும் கொண்டனர். அப்படி இருக்கையில், எங்கள் சிறுபான்மையினரை ஆதரிக்கும் கட்சியை நாடிதான் எங்களது கூட்டணி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஒரு சில அரசியல் விமர்சகர்கள் எஸ் டி பி ஐ கட்சி விஜய்யுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என கூறுகின்றனர். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த தான் ஒன்பது மாச கால அவகாசம் என்றும் அரசல் புரசலான தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கும் நிலையில் அதிமுகவிற்கு அது பாதகமாகவே இருக்கும்.