ADMK BJP: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புரட்சித்தலைவி இருந்த காலத்திலிருந்து கட்சிக்கு பெரிய ஊன்றுகோலாக இருந்து வந்தவர். பாஜக கூட்டணியிலிருந்ததால்தான் அதிமுக வெற்றி பெறவில்லை என்று கடந்த தேர்தலின் போது பகிரங்கமாக கூறியிருந்தார். மேற்கொண்டு கூட்டணியை விட்டு பிரிகையில் அதிக மகிழ்ச்சி அடைந்த வரும் இவர்தான்.
தொடர்ந்து பாஜக ரீதியாக எதிர் கருத்தை தெரிவித்தும் வந்தார். தற்போது பாஜக அதிமுக கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். நான் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி வழியில் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் கட்சி கலக்கத்தில் உள்ளது. அதிமுக வுடன் கூட்டணி வைக்கவேண்டு மென்பதற்காகவே பாஜக அண்ணாமலையை கட்சியிலிருந்தே தூக்கியது.
தற்சமயம் அதிமுக முன்னாள் சீனியர் அமைச்சர் இவ்வாறு கூறி கட்சியை விலகியிருப்பது இவர்களுக்கிடையே மன கசப்பை ஏற்படுத்தலாம். மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகள் அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறுகின்றனர். அப்படி பேசும் பட்சத்தில் அவர் மீண்டும் கட்சிக்குள் இணைந்தாலும் அவரின் அரசியல் வேகமானது சற்று குறைந்து தான் இருக்கும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.