கண்ணீர் விட்ட அமைச்சர்! ஆறுதல் கூறிய பொதுமக்கள்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசியலில் மிக பரபரப்பான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக திமுக என்று அனைத்து கட்சிகளும் மிக பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக கடந்த பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகள் திட்டங்கள் போன்றவற்றை எல்லாரிடமும் எடுத்துரைத்து வாக்கு கேட்டு வருகிறது.

அதேபோல எதிர்கட்சியான திமுக கடந்த பத்து வருட காலமாக அதிமுக மிகப்பெரிய ஊழலை செய்திருப்பதாகவும், அதன் பட்டியலை ஆளுநரிடம் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தெரிவித்து ஊழலை ஒழித்துக் கட்ட எங்களுக்கு வாக்களியுங்கள் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதோடு கிராமங்கள்தோறும் அதிமுகவினர் அழிப்போம் என்று ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவருடைய மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அவரும் அதிமுகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

அதேபோல அதிமுகவை பொருத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களிலெல்லாம் அதிமுகவின் இந்த 10 ஆண்டுகால சாதனையை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இன்னும் இன்னும் பல திட்டங்களை செய்தும் வந்தார். இன்னும் சொல்லப்போனால் தேர்தல் தேதி அறிவிக்கும் ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு வரையில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்துக் கொண்டுதான் இருந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த நிலையில் தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து இருக்கின்ற சேவூர் கிராமத்தில் ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகளை சந்தித்து அவர் தனக்கு வாக்கு சேகரித்தார்.வாக்கு சேகரித்த சமயத்தில் திரு சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் கண் கலங்கியபடியே தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. என்னை வெற்றி பெற வையுங்கள் என தெரிவித்துக் கொண்டே கண்களில் இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார் எனவும் சொல்லப்படுகின்றது.

ஆகவே அங்கே இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் எதற்காக இவ்வாறு அழவேண்டும் செய்த சாதனையை தெரிவித்து வாக்கு கேட்கலாமே என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.