ADMK DMK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததையடுத்து கட்சிக்குள்ளேயே அதிருத்தியடைந்த சில நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் அனைத்துமாக இருந்த இளைஞரணி மாநில செயலாளரான சந்திரசேகர் கட்சியிலிருந்து விலகி இருப்பது சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகள் எப்போதும் இவருக்கு தான் போய் சேரும். அந்த அளவிற்கு மிகவும் நம்பிக்கை வாய்ந்த நபர். நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கூட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தனது மனைவியை நிற்க வைத்து வெற்றி பெற செய்தார்.
இப்படி அதிமுகவிற்கு கோவை யில் உள்ள பேரூராட்சிகளில் நல்ல மதிப்பை பெற்று தந்த இவருக்கு ஒரு பிரச்சனை வந்தபோது யாரும் கைகொடுக்கவில்லை. குறிப்பாக விஜிலென்ஸ் சோதனை செய்து வழக்கு தொடுத்த போதெல்லாம் இவரை யாரும் கண்டுக்க கூட இல்லை. அப்போதிலிருந்து இவருக்கு அதிமுக மீது அதிரப்தி நிலவ ஆரம்பித்துவிட்டது. அப்படியே இவரின் மதிப்பானது கட்சியில் குறைந்து கொண்டே வந்தது. இப்படி இருக்கையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் வேலுமணிக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட ஆரம்பித்தது. கடந்த முறை கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இம்முறை குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளிலாவது திமுக கொடியை ஊன்றி விட வேண்டுமென எண்ணுகின்றனர். அதற்கேற்றார் போல செந்தில் பாலாஜியும் கோவை-யில், நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு பேசுகையில், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் குறிப்பாக 10 தொகுதிகளிலும் திமுக கட்டாயம் வெற்றி பெறும்.
அதிலும் தொண்டாமுத்தூர் தொகுதி அதிகப்படியான வாக்குகளை பெறும் என்று கூறியுள்ளார். இதற்குப் பின்னணியில் சந்திரசேகர் இருப்பதாகவும் அவரின் மேல் உள்ள நம்பிக்கையால் தான் செந்தில் பாலாஜி இப்படி பேசியுள்ளாராம். சந்திரசேகர் திமுகவில் இணைய போவதாகவும், அவரை செந்தில் பாலாஜி முழுவதுமாக வளைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்திரசேகர் திமுக – விற்கு சென்றால் கோவை பேரூராட்சிகளில் அதிமுக கட்டாயம் அடி வாங்குவது உறுதி.